"ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி சப்ளைக்கு ஒப்பந்தபுள்ளிகள் வந்துள்ளன" -மும்பை மாநகராட்சி தகவல்
ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை வாங்க தங்களுக்கு ஒப்பந்தபுள்ளிகள் கிடைத்திருக்கின்றன என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒரு கோடி டோசுகள் தடுப்பூசியை வாங்க தாங்கள் விடுத்த உலகளாவிய டெண்டரின் அடிப்படையில் இந்த ஒப்பந்தபுள்ளிகள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாகல் தெரிவித்துள்ளார்.
700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டர் கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான இறுதி நாள் இன்றுடன் முடிகிறது. O2 Blue Energy SRL என்ற செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நிறுவனம், ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை ஒரு மாதத்தில் சப்ளை செய்ய முடியும் என தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இப்படி சபளை செய்ய யாருக்கும் தாங்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என ஃபைசர் மறுப்பு தெரிவித்துள்ளது.
Comments